ஒரு பெண்ணின் காதல் தோல்வியின் வலி .??????
காதல் தோல்வியின் வலி ஆண்.பெண் இருவருக்கும் பொதுவானது.ஆனால்,சமூகவலை தளங்களில் உள்ள ஆண்கள்,அவர்களுக்கு மட்டுமே வலி இருக்குற மாதிரி அதிகம் பதிவு செய்யுறாங்க. பெண்களுக்கு காதல் தோல்வியால் வலி இருக்காது, எல்லாம் ஏமாத்துறவளுங்க அது, இதுன்னு ஆண்கள் தங்களோட தனிப்பட்ட ஆதங்கத்தை சமூக வலைத்தளத்தில் கொட்டி தீர்க்கிறார்கள்.
உண்மையில் பெண்களுக்கு காதல் தோல்வியின் வலியை வெளியே சொல்லி அழனும்னு தோனுச்சுன்னா கூட இந்த சமூகம் பெண்ணை ஒழுக்கமற்றவள்னுமுத்த...ிரை பதித்துவிடுகிறார்கள்.இது எத்தனை ஆண்களுக்கு புரியும்னு தெரியாது...
எவ்வளவுதான் பெண்கள் படிச்சு,வேலைக்கு போயி சம்பாதிச்சு,சொந்த கால்ல நின்னாலும்,அவங்க சமூகத்துக்கு பயந்து தான் வாழ்றாங்க.சமூகத்தை பொருட்படுத்தாத பெண்கள் ரொம்ப ரொம்ப கம்மியா தான் இருக்காங்க...
ஆண்கள் அவர்களுக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருந்தாலே,அவங்க நட்பு வட்டாரத்துல "அவ தான் என் ஆளு மச்சி" ன்னு தைரியமா சொல்லிக்க முடியும்.அவங்க அந்த பொண்ணுக்கிட்ட வெளிப்படையா காதலை சொல்றாங்களோ,இல்லையோ??..,ஆனா "என் ஆளு"ன்னு நண்பர்கள்கிட்ட சொல்லி சந்தோஷப்பட்டுக்குறாங்க.
பெண்கள் இதில்கூட மாறுபட்டுத் தான் இருக்குறாங்க. அவங்க ஒரு ஆணை காதலிச்சாக் கூட சக தோழிங்ககிட்ட சொல்றதுக்கே நிறைய யோசிப்பாங்க.சொல்லலாமா? வேணாமா? சொன்னா எப்படி எடுத்துப்பாங்க?ன்னு குழப்பத்தில இருப்பாங்க. ஆனா, அவங்க மனசுலயும் ஆசை இருக்கும்,யார்கிட்டயாச்சும் சொல்லி சந்தோஷப்பட்டுக்கனும்னு,அதுக்காக நிறைய அவகாசம் எடுத்து பொறுமையா தோழிங்ககிட்ட சொல்லுவாங்க.
காதலை சொல்வதற்கு முன்னாடியே தயக்கம் இல்லாமல் "என் ஆளு"ன்னு சொல்லிக்கிற ஆண்கள், காதலிச்சாலும் நெருங்கிய தோழிகிட்ட கூட சொல்லலாமான்னு தயங்குகிற பெண்கள். இப்படி மகிழ்ச்சியைக்கூட வெளியே சொல்ல தயங்கும் பெண்கள்,எப்படி காதல் தோல்வியை வெளிக்காட்டுவாங்க....???
ஆண்கள் மாதிரியே பெண்களும் சமூக வலைதளங்கள் மூலம் காதல் தோல்வியை வெளிக்காட்டினால் வக்கிரம் பிடித்த ஆண்கள், அதுக்கு எப்படி பதில் எழுதுவாங்கன்னு ஆண்களில் பல பேருக்கு தெரியும்...
பெண்கள் வலி வெளியே தெரிய வாய்ப்பில்லை, அதேபோல் தான் அவர்கள் மகிழ்ச்சியும்....
இதற்காக சொல்லப்பட்டது தான் "பெண்களின் மனது மிகவும் ஆழமானது".
பெண்கள் ஒன்னும் ஜடம் இல்ல.... அவங்க மனவேதனையெல்லாம்தனிமைக்கு சொந்தமானது...!

No comments: