Saturday, April 26 2025

Header Ads

காமராஜர் - Few Unknown things

Tamil good political person only one


அண்ணாதுரை தமிழக முதல்வராக இருந்த போது அமெரிக்கா சென்று இருந்தார். அது சமயம் அமெரிக்க அதிபரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்துக் காத்திருந்தார்.


அமெரிக்க அதிபர் "இந்தியாவின் குட்டி மாநில முதல்வர்களை எல்லாம் நான் பார்க்க மாட்டேன்" என்று அனுமதி மறுத்து விட்டார். அண்ணாதுரை அவரைப் பார்க்காமல் நாடு திரும்பினார்.
அமெரிக்க அதிபர் இந்தியா வந்தார். மூன்று பிரதமர்களை உருவாக்கிய 'கிங் மேக்கர்' காமராஜரைப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

பத்திரிகையாளர்கள் காமராஜரிடம் "அமெரிக்க அதிபர் உங்களைக் காண விரும்புகிறார்" என்று கூறினர்.

அதற்கு காமராஜர் "நான் அவரை சந்திக்கப் போவதில்லை. அன்று அண்ணாதுரை அவரைச் சந்திக்க விரும்பியபோது அவர் சந்திக்க மறுத்து விட்டார். தமிழனைச் சந்திக்க மறுத்த அமெரிக்க அதிபரை தமிழனாகிய நானும் சந்திக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
எதிர் எதிர் கட்சியில் இருந்தாலும் தமிழன் என்ற உணர்வோடு ஆளப்பட்ட தமிழகம் இன்று கைதிகளாலும் கயவர்களாலும் ஆளப்பட்டு வருகிறது தான் இன்றைய உச்ச கட்ட வேதனை...

No comments:

Powered by Blogger.