Friday, March 14 2025

Header Ads

காவலர் மற்றும் குடிமகன் உரையாடல்!


காவலர்:
யோவ் உன் பேர் என்னயா?
குடிமகன்:
என் பேரு 'ராஜேஷ்'ங்க.
ஆதார் அட்டைல 'ருஜேஷ்'ங்க.
ரேசன் கார்டுல 'ரஜேஷ்'
ஸ்கூல் டீசியில 'இராஜேஷ்'
டிரைவிங் லைசென்ஸ்ல 'ரிஜேஷ்'ங்க.
காவலர்:
யோவ், என்னயா பேர கேட்டா,
ஒலரிகிட்டு இருக்கே.
குடிமகன்:
நான் ஒலரலைங்க சார்!
நம்ம நாட்ல அரசு ஆவணங்களில்
நம்ம பெயரை இப்படித்தான் அவுங்கவுங்க இஷ்டத்துக்கு
எழுதி வைக்கிறாங்க.
காவலர்:
என்னயா இது?
ஆதார் அட்டைல
உன் போட்டோவே இல்ல.
குடிமகன்:
நல்லா உத்துப் பாருங்க சார்,
அதுல என் கண்ணு மட்டும் தெரியும்.
நம்ம டெக்னாலஜி அப்டி.
காவலர்:
உன் லைசென்ஸ்ல
கையெழுத்த காணோம்?
குடிமகன்:
நல்லா பாருங்க சார்,
கை ரேகை மாதிரி
ரெண்டு மூனு கோடு போகும்.
காவலர்:
ஆமா நீ எதுக்கு ஓவர் ஸ்பீடுல வந்தே?
குடிமகன்:
சார், நான் வச்சிருக்கிறது TVS -50.
இது 40 க்கு மேல போகாதுங்க.
காவலர்:
ரேஸன் கார்டுல உனக்கு வயசு
12 னு போட்டிருக்கு?
எப்டி நீ வண்டி ஓட்டலாம்?
குடிமகன்:
அய்யோ ஆபிசர்,
இது 10 வருஷத்துக்கு முன்னாடி
தமிழக அரசு கொடுத்த ரேசன் கார்டு.
இப்ப வரைக்கும் புது ரேசன் கார்டு தரவே இல்ல.
இப்ப எனக்கு 22 வயசு சார்.
காவலர்:
ரோடு டேக்ஸ்லாம்
ஒழுங்கா கட்டிருக்கியா?
குடிமகன்:
நம்ம ஊர்ல எங்க சார் இருக்கு ரோடு?
நீங்க ரோட காட்டுங்க
நாங்க டேக்ஸ கட்டுறோம்.
காவலர்:
இது சரிவராது.
நீ கோர்ட்ல வந்து பேசிக்கோ.
குடிமகன்:
ஐயோ வேணாம் சார்.
வாய்தா வாய்தானு
நாலு வருஷத்துக்கு இழுத்தடிச்சு அப்புறம் கேஸயே
தள்ளுபடி பண்ணிருவாங்க.
நீதி மன்றத்துல எப்ப சார்
எங்கள மாதிரி ஆளுங்களுக்கு
நீதி கிடச்சிருக்கு?
காவலர்:
இவ்ளோ வெவரமா பேசுறியே,
நீ என்ன படிச்சிருக்க?
குடிமகன்:
பாத்தீங்களா சார்,
நான் படிச்சவன்கிறதாலதான்
தெளிவா கேக்குறேன்னு
நீங்களே புரிஞ்சுக்கிட்டீங்க.
படிச்சா வெவரம் வந்திரும்னு தெரிஞ்சுதான் அரசு
சில அரசு பள்ளிகளை மூடிட்டு,
மீதி இருக்கிற பள்ளிகளைக்
கவனிக்காம வச்சிருக்காங்க.
நாம முட்டாளா
இருக்குற வரைக்கும்தான்
அவங்களால
ஆட்சி செய்யமுடியும்.
காவலர்:
சரியா சொன்னே தம்பி.
உன்ன மாதிரியே எல்லாரும்
தெளிவா இருந்தா
நாங்க ஏன் உங்கள
தொல்ல பண்ண போறோம்.
சரி தம்பி நீ கெளம்பு.
பாத்துப் போப்பா.
(இதுல பல செய்திகள் அடங்கியிருக்கு.
புரிஞ்சவங்க பிறருக்குப் பகிருங்கள்) please share it.

No comments:

Powered by Blogger.