Header Ads

Breaking News
recent

இது சிறுவர்களுக்கான கதை மட்டுமே!


ராமுவும் சோமுவும் நல்ல நண்பர்கள். பக்கத்து பக்கத்து தெருவில் வசித்து வந்தனர். இருவரும் ஒன்றாகவே படித்து ஒரே அலுவலகத்தில் வேலையும் பார்த்து வந்தனர். ஒன்றாகவே ரயிலில் போய் வருவர்.

அன்று காலை அலுவலகம் சென்று கொண்டிருக்கும் போது அந்த ரயில் நிறுத்தம் சற்று பதட்டமாக காணப்பட்டது. எல்லோர் முகத்திலும் ஏதோ அளவு கடந்த துயரத்தையும், இயலாமையும், மௌனத்தையும் பார்த்த ராமு ஏதோ விபரீதம் என்று உணர்ந்து ரயிலில் இருந்து இறங்கினான். சோமு எவ்வளவோ தடுத்து பார்த்தான். அன்று அலுவலகத்தில் இருந்த கிளையன்ட் விசிட்டையும், சரியாக ஒன்பது மணிக்கு போயாக வேண்டும் என்பதையும் நினைவூட்டினான்.
சோமு சரியான நேரத்துக்கு அலுவலகம் சென்று விட்டான். அவ்வப்போது ராமுவின் இருக்கையை பார்த்தான். ராமு அன்று முழுவதும் அலுவலகம் வரவில்லை.
மறுநாள் அலுவலகம் வந்த ராமுவை மனித வள அதிகாரி அவன் இருக்கைக்கே வந்து பாராட்டினார்.
“ராமு…சரியான நேரத்தில் அந்த ரயில் நிலையத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நம் ஊழியர் ஒருவரை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறீர்கள். உங்களுக்கு அவர்கள் குடும்பம் மட்டுமன்றி நம் நிறுவனமே மிகவும் கடமைப்பட்டிருக்கிறது” என்றார்.
அந்த காலாண்டுக்கான சிறந்த ஊழியருக்கான விருதும் பரிசுப்பணமும் ராமுவுக்கு வழங்கப்பட்டு அனைவர் முன்னிலையிலும் கவுரவிக்கப்பட்டான்.
-Anbu

No comments:

Powered by Blogger.