என்னிடம் எதுவுமில்லை பணம் என்ற மூன்றெழுத்தைத் தவிர!
எல்லாப் பறவைகளும் வானில் பறப்பதைப் பார்த்த கோழிகள் தானும் அது போல பறக்க நினைத்தன.
இறைவனிடம் கேட்டன. சிறகுகளை தைத்துக்கொள்ள ஊசியை கொடுத்தார்.
ஊசியை தொலைத்த கோழிகள் இன்னமும் நிலத்தில் கொத்திக் கொத்தி தேடிக்கொண்டிருக்கின்றன.
எழுத சுவாரசியங்கள் ஏதுமின்றி வெற்றுத்தாளாய் இருக்கின்றன என்னுடைய நாட்குறிப்புகள்.
வண்ணமயமாக்கும் தூரிகைகளை தொலைத்து விட்டேன். தேடிக்கொண்டிருக்கிறேன் தூர தேசத்தில்.
எழுதுவதற்கு என்னிடம் எதுவுமில்லை பணம் என்ற மூன்றெழுத்தைத் தவிர.
No comments: