Header Ads

Breaking News
recent

மகிழ்ச்சியான வாழ்வுக்கு உணவே மருந்து

மாரடைப்புக்கான முதலுதவி பற்றி தெரிந்து வைப்போம்!
சி.பி.ஆர். முதலுதவி
தீவிரமான மாரடைப்பு வருவதன் முதல் அறிகுறி, திடீர் மயக்கம்தான்.
மயக்கம் அடைந்தவரைச் சுற்றிக் கூட்டம்போடக் கூடாது. முகத்தில் தண்ணீர் தெளிப்பது கூடாது.
மார்பு அல்லது இடப்புறத்தோள்பட்டையில் மிக அதிக வலி, மூச்சிறைப்பு ஆகியவை மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.
இந்த அறிகுறி தெரிந்தவுடன், நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை சமமான தரையில் படுக்கவைக்கவேன்டும்.
நோயாளியை உடனடியாக ஆம்புலன்ஸ் அல்லது வேறு பாதுகாப்பான வாகனம் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது மிகவும் அவசியம்.
இதயத் துடிப்பையும் நாடித் துடிப்பையும் பரிசோதித்துப்பார்க்கவேண்டும். துடிப்பு இல்லை என்றால், மயக்கம் அடைந்தவரின் மார்பில் கையால் அழுத்தி 'கார்டியோபல்மோனரி ரிசஸிடேஷன்’ (Cardiopulmonary resuscitation - CPR) என்னும் முதலுதவி செய்ய வேண்டும். வாய் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கவும் முயல வேண்டும். குடும்பத்தில் ஒருவராவது சி.பி.ஆர். முதலுதவி தெரிந்து வைத்திருப்பது நல்லது.

No comments:

Powered by Blogger.