Header Ads

Breaking News
recent

நான் சிவகங்கைகாரன்

உலக புத்தக தினமான இன்று பதிப்பாளர், கவிஞர் மீரா-வை நினைவு கூறாமல் இருக்க முடியவில்லை.பதிப்பகம் இல்லாமல் புத்தகம் இல்லை.
அன்னம் பதிப்பகம்,நம்பர் 2, சிவன் கோவில் தெரு, சிவகங்கை.இந்ந முகவரி தமிழ் புத்தக மற்றும் பதிப்பக வரலாற்றின் பக்கங்களில் பொன் எழுத்தாள் பொறிக்கப்பட வேண்டியவை.
என்னை சிவகங்கைகாரனாக பெருமை அடைய செய்யும் பட்டியலில் கவிஞர் மீரா விற்கு தனியிடம் உண்டு.சிவகங்கை யின் இலக்கிய பெருமைக்கு சொந்தக்காரர்.
கதை,கவிதை என்ற ஆறுகள் சங்கமிக்கும் இடமாக சிவகங்கையை மாற்றி வைத்திருந்தார்.இன்று எழுத்துலகின் பிரபலங்களாக இருப்பவர்களின் முதல் படைப்புகள் கவிஞர் மீராவின் அன்னம் பதிப்பகத்தின் மூலமே வெளியிடப்பட்டது.
அந்த நாட்களில் புத்தகங்கள் வெளியிடுவது இன்று போல எளிதானதில்லை.
அன்னம் பதிப்பகம் பல்வேறு விதங்களில் தமிழ்ப் பதிப்புலகில் தனித்துவமானது.
வெயில் காய்ந்த சிவகங்கை கருவைக் காட்டுக்குள் தமிழ் இலக்கிய சோலையை அமைக்க தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார்
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் பேராசிரியராக பணி செய்தார்.
'கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள்' இவரின் பிரபலமான கவிதை தொகுப்பு.
இன்றைய தலைமுறைக்கு கவிஞர் மீராவை(மீ. ராசேந்திரன்)கொண்டு சேர்ப்பது நமது கடமை.

-பழனியப்பன்  

No comments:

Powered by Blogger.