Tuesday, March 18 2025

Header Ads

அமைச்சர்_செல்லூர்_ராஜீ வின் அடுத்த திட்டங்கள்-கேவலம் , அலங்கோலங்கள்

*முட்டாள் அமைச்சரும் அடிமை ஐஏஎஸ் அதிகாரிகளும்*
மக்களை எவ்வளவு அடிமுட்டாளாக நினைத்தால் செல்லூர் ராஜு 300 தெர்மோகோல் சீட்கள் 10 லட்சம் என்று வாய்கூசாமல் ஊடகங்களிடம் புளுகி இருப்பார்! இது வடிகட்டிய அயோக்கியத்தனத்தின் உச்சக்கட்ட ஏமாற்று வேலை!
300 தெர்மோகோல் அதிகபட்ச விலை 5000 மட்டும் தான்(ஆதாரம் பார்க்க). இந்த அமைச்சர்தான் தற்குறி அறிவில்லாதவர் போல நடித்து ஊரை ஏமாற்றுகிறார் என்றால் - அவரோடு சென்ற இரண்டு மாவட்ட ஆட்சியர்களையும் அதிகாரிகளையும் என்ன சொல்வது ? படித்த மடையர்கள் என்றா இல்லை ஊழலில் பங்குதாரர்கள் என்றா?
சரி 10 லட்சங்கள் எந்த வழியில் செலவழிக்கப்பட்டது ? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதுமே இந்த கொள்ளை கூட்டம் எல்லா வகையிலும் எப்படி கொள்ளை அடித்திருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள!
*மக்கள் இன்னும் மாறாமல் இந்த அரசியல்வாதிகளையும் அவர்கள் கட்சிகளையும்  நடிகர்களையும் நம்பினால் சர்வநாசம் ஆகப்போவது நம் சந்ததிதான். இதற்காகத்தான் மக்கள் படித்த நேர்மையானவர்களை தேடத்துவங்கி உள்ளனர்.*

#அமைச்சர்_செல்லூர்_ராஜீ வின் அடுத்த திட்டங்கள்

1. கடல்நீர் ஆவியாவதை தடுக்க குடை பிடிக்கும் திட்டம்...
2. ஒசோனில் உள்ள ஒட்டையை cello tape கொண்டு ஒட்டும் திட்டம்..
3. வெப்பத்தை குறைக்க சூரியனை கம்பளி போர்வையால் போர்த்தும் திட்டம்...
4. அடிபம்பில் இருந்து ஆயில் எடுக்கும் திட்டம்
5. வெயிலின் தாக்கத்தை குறைக்க தமிழகம் முழுவதும் பந்தல் போடும் திட்டம்...
6. ஆற்றுநீர் கடலில் கலப்பதை தடுக்க வாட்டர் பாட்டலில் சேமிக்கும் திட்டம்...
7. அனல்காற்றை தடுக்க தமிழகத்தில் 4   மூலைகளிலும் Ac வைக்கும் திட்டம்...
8. சாக்கடையில் இருந்து சால்னா எடுக்கும் திட்டம்.
9. கொசுவுக்கு குடும்பகட்டுபாடு திட்டம்...
10. மழை நீரை சேமிக்க ஆற்றில் மணல் அள்ளும் திட்டம்...
11. சாலை விரிசலை அடைக்க சிமெண்ட் போட்டு ஒட்டும் திட்டம்...

No comments:

Powered by Blogger.