Header Ads

Breaking News
recent

ஒரு யானையும், ஒரு நாயும் ஒரே நேரத்தில் கர்பமானது!

ஒரு சமயம்,
ஒரு யானையும், ஒரு நாயும் ஒரே நேரத்தில் கர்பமானது.
மூன்று மாதத்தில் நாய் தன் குட்டிகளை ஈன்றது. ஆறு மாதங்கள் கழித்து மறுபடியும் நாய் கர்பமானது.
அடுத்த மூன்று மாதத்தில் மறுபடியும் நாய் தன் குட்டிகளை ஈன்றது. இது வழக்கமாக தொடர்ந்தது.
தன் பதினெட்டாவது மாதத்தில், நாய் யானையிடம் சென்று கேட்டது.
Funny kutti kathai in tamil

"யானையே, நீ உண்மையிலே கர்ப்பம் தரிதாயா? நீயும் நானும் ஒரே சமயத்தில் தான் கர்பமாநோம், நான் இதோடு மூன்று முறை கருத்தரித்து குட்டிகளை ஈன்றுவிட்டேன். இப்பொழுது அவைகள் வளர்ந்து விட்டன,
ஆனால் நீ இன்றுவரையில் கார்பமாகவே இருக்கிறாயே, என்னதான் நடக்கிறது சொல்! என்றது.
அதற்கு சற்றும் பதட்டப்படாமல் யானை பதிலளித்தது "தோழியே நீ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்,
நான் சுமந்துகொண்டிருப்பது நாய்க்குட்டி அல்ல, யானை குட்டியை.
நான் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான் ஈன்றெடுக்க முடியும்.
என் குழந்தை விழுவதை உணரும் இந்த பூமி. என் குழந்தை நடந்தால், அதை மனிதர்கள் நின்று பிரமித்து பார்ப்பார்கள்.
நான் பிரம்மாண்டத்தை சுமக்கிறேன், அதுவே பெருமை எனக்கு " என்றது.
நீதி:-
உங்களது உழைப்புக்கும், தேடலுக்கும் அங்கீகாரமும், புகழும் கிடைக்கவில்லை என்று காணாமல் போய்விடாதீர்கள்.
வாழ்க்கையை வாழ்வதை விட, சாதிப்பதுதான் பெருமை.
அதனால்....... நீங்களே உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள், " எனக்கென்று ஒரு நேரம் வரும், வானம் வசப்படும். என் சாதனைகள் மக்கள் பிரமிப்பாக பார்ப்பார்கள்.
நான் சாதிக்கும் நேரம் வெகுதூரம் இல்லை. " என்று ..

No comments:

Powered by Blogger.