Sunday, March 16 2025

Header Ads

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்

இறுதிவரை எதிரிகளால் வீழ்த்த முடியவில்லை .. இது போதுமென அவரே விலகிக்கொண்டார் .. வீர மரணம்!













மறைந்தாலும் இருந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று
ஊர் சொல்ல வேண்டும் !!!



அம்மா அமரர் ஆனார். மிக கடுமையான ஏற்றுகொள்ளமுடியாத செய்தி.அதிர்ச்சியிலிருந்து மீளவும் முடியவில்லை. இயற்கையின் முன் மனிதனின் அனைத்து முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளியாக இந்த பேரிழப்பு ஏற்பட்டுள்ளது .அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்.

இது உண்மையே !!
# பூ போன்ற மகள்
அப்பல்லோவில் படுத்துக் கிடக்கிறாளே என
புலம்புவதற்கு தாய் இல்லை ....

# நோய் தீர்ந்து மகள்
புன்னகை சிந்தி வருவாளென
பார்த்திருக்கத் தந்தை இல்லை ...

# தெய்வங்களைக் கேட்டே
என் சகோதரி நலம் மீட்பேன்
என்று பூசை செய்ய
சகோதரன் இல்லை ..

# மாற்றுடை வேண்டுமோ என
உடுப்புகள் தேடி எடுத்துப் போக
உடன் பிறந்த தங்கை இல்லை ..

# பெற்றவள் நலம் மீட்ட பின்பே
மற்ற வேலை என்று
மார் தட்டிச் சொல்வதற்கு மகன் இல்லை ..

# மருந்து மாத்திரை தேடி
எடுத்து மணி தவறாமல்
கொடுத்திட
மகள் இல்லை ..

கோடான கோடி மக்கள் இருந்தாலும், தனிமரமான ஜெயலலிதா ...

No comments:

Powered by Blogger.