Tuesday, March 18 2025

Header Ads

Oru tamil kutti Kathai for special people -ஒரு நாள் காலை,

ஒரு நாள் காலை,

ஏரியைப் பற்றி அதிகமாக தெரிந்திராத பெண்ணொருத்தி படகிலேறி ஏரிக்குள் சென்றாள்.

சற்று தொலைவில் படகை நிறுத்திவிட்டு தன்னுடன் எடுத்துச் சென்ற புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினாள். அங்குள்ள பாதுகாப்பு அதிகாரி அவளைப் படகுடன் கரைக்கு வரச் சொன்னார். ...

”குட் மார்னிங் மேடம். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

”புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். இதுகூடத் தெரியாமல் இப்படியொரு கேள்வியா?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

“”இங்கு மீன் பிடிக்கக்கூடாது என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார் அதிகாரி.

“”ஐயாம் சாரி சார்! நான் மீன் பிடிக்கவில்லை” என்று சொன்னாள் அவள்.

”அது தெரிகிறது. இருந்தாலும் இந்தப் படகில் மீன் பிடிப்பதற்கான சாதனங்கள் அனைத்தும் தயாராக உள்ளன. எப்போது வேண்டுமானாலும் மீன் பிடிக்க ஆசை வரலாமல்லவா? அப்போது உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்” என்று அதிகாரி சொன்னார்.

”அப்படியானால் நீங்கள் என்னை கற்பழிக்க முயற்சித்ததாக கூச்சலிட வேண்டி வரும்” என்றாள் அவள்.

”அது எப்படி? நான் உங்களைத் தொடக்கூட இல்லையே?” என்று அதிர்ச்சியுடன் சொன்னார் அதிகாரி.

”உண்மைதான். ஆனால் நீங்கள் ஓர் ஆண். எப்போது வேண்டுமானாலும் என்னை கற்பழிக்க முயற்சிக்கலாமல்லவா?”

சட்டென்று சுதாரித்த அதிகாரி,

"தேங்க்ஸ் மேடம்! ஹேவ் எ நைஸ் டே!” என்று சொல்லி நகர்ந்தார்.

நீதி: எப்போதும் பெண்களிடம் விவாதம் செய்யாதீர்கள். அவர்களும் யோசிப்பாங்க இல்லையா?

No comments:

Powered by Blogger.